Asianet News TamilAsianet News Tamil

அடுத்த இரு தினங்களுக்கு இந்த 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... வானிலை மையம் தகவல்..!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Heavy rains in 13 districts...meteorological centre
Author
Salem, First Published May 24, 2020, 2:14 PM IST

 வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் அடுத்த 2 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, தென்காசி, மதுரை, ராமநாதபுரம், வேலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heavy rains in 13 districts...meteorological centre

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை  40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். இதன் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Heavy rains in 13 districts...meteorological centre

மேலும், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios