சேலத்தில் அதிர்ச்சி.. கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 26 வயது இளைஞரின் கண் அகற்றம்..!
சேலத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த இளைஞரின் கண் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த இளைஞரின் கண் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மியூகோர்மைகோசிஸ் (Mucormy cosis) எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று தமிழகத்தில் சேலம், நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலத்தில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சேலத்தில் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு அறிகுறிகளுடன் 30க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகள் அவருக்கு காணப்பட்டது. பின்னர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, மருத்துவர்கள் இதற்கான மருந்துகள் எங்களிடம் இல்லை என்று வெளியே வாங்கி வரச்சொல்லியுள்ளனர். ஆனால், அதற்கான மருந்து கிடைக்கவில்லை. மேலும், தொற்றுக்கான ஊசியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து பாதிப்பு தீவிரமாக பரவியதையடுத்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், தனியார் மருத்துவ குழுவினர் அவருக்கு கண், மூக்கு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் அவரது ஒரு கண் அகற்றப்பட்டது. இதையடுத்து தனி வார்டில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.