Asianet News TamilAsianet News Tamil

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா கால பணியில் இருந்து விலக்கு... அரசு அதிரடி முடிவு..!

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா கால பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என சேலம் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 

Exemption from corona term work for pregnant and lactating mothers
Author
Salem, First Published May 9, 2021, 7:02 PM IST

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா கால பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. 

மதுரை மாவட்டம் அனுப்பான்டி சுகாதார நிலையத்தில் மருத்துவராக சண்முகப்பிரியா பணியாற்றி வந்தார். 8 கர்ப்பிணியாக இருந்தாலும் சண்முகப்பிரியா வழக்கம்போல் இந்த நெருக்கடியான கொரோனா தொற்று பரவிய காலத்தில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

Exemption from corona term work for pregnant and lactating mothers

இவரது மறைவு மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி இருந்தார். 

Exemption from corona term work for pregnant and lactating mothers

இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா கால பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என சேலம் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளுக்கு பணியிலிருந்து விலக்கு தர அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios