தமிழகத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு... மீறினால் கடும் நடவடிக்கை..!
இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதற்கும் ரெயில் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 170-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகளாவிய பலி எண்ணிக்கை 13 ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளது. உலகெங்கிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதற்கும் ரெயில் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமலானது. பொது மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் வரை பேருந்துகள், கால் டாக்ஸி, ஆட்டோ, லாரிகள் ஓடாது; அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியே வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.