Sunday Full Lockdown: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.. என்னென்ன இயங்கும்? இயங்காது?

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

complete curfew has been imposed in Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 30,000க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 6ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 23ம் தேதியான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

complete curfew has been imposed in Tamil Nadu

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நேற்று காலையில் பொருட்கள் வாங்க மாநிலம் முழுவதும் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் காய்கறி, மீன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகளை வாங்கி சமைத்து உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் காய்கறி, மீன், மட்டன்களை முன்தினமே வாங்கி வைத்து கொள்ள மக்கள், நேற்று காலை முதல் காசிமேடு துறைமுகம், பட்டினப்பாக்கம் கடற்கரை, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க படையெடுத்தனர். அவர்களிடம் கொரோனா பயம் இல்லாத காரணத்தால், சமூக இடைவெளியை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கி சென்றனர். அதேபோல மட்டன் கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் இரட்டிப்பாக காணப்பட்டது. முழு ஊரடங்கை முன்னிட்டு மாநிலம் முழுவதும் மாவட்ட எல்லைகளில்  சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த பணிகளில் சுமார் 1 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

complete curfew has been imposed in Tamil Nadu

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எவையெல்லாம் செயல்படும்:

* மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும் பெட்ரோல் பங்குகள் செயல்படும்

* உணவகங்கள் செயல்படும். பார்சல் வாங்கிக்கொள்ள அனுமதி.

* அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடைகை வாகனங்களில் பயணம் செய்யலாம்.

* திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் திருமண அழைப்பு பத்திரிகைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம். திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

எவற்றுக்கெல்லாம் தடை:

* பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது.

* கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை

* மதுபானக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட

* அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் தடை

*  காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள் மூடல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios