குழந்தை கடத்தப்பட்ட ஒரு மணிநேரத்தில் அலேக்காக தூக்கிய சேலம் போலீஸ்... அதிரடி சரவெடிக்கு பொதுமக்கள் பாராட்டு..!
சேலம், முள்ளாகாடு நால்ரோடு பகுதியில் தம்மணன் காலனி உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் தம்பதி ஒருவரின் 3 வயது குழந்தை யோகேஸ்வரன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது சேலைத்தலைப்பால் முகத்தை மூடியபடி மொபட்டில் வந்த இரு பெண்கள், குழந்தை யோகேஸ்வரனை கண்ணிமைக்கும் நேரத்தில் துாக்கிக் கொண்டு சிட்டாகப் பறந்தனர்.

இதை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குழந்தையின் பெற்றோரிடம் புகாரைப் பெற்ற வேலம் மாநகரக போலீஸ் கமிஷனர், உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்தார். தேடுதல் பணியையும் முடுக்கி விட்டார். தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட சிறிது நேரத்திற்குள் குழந்தையை முள்ளாகாடு பகுதியில் இருந்து சிறிது தொலைவில் சேலத்தாம்பட்டி பகுதியில் தனிப்படை போலீசார் மீட்டனர். குழந்தையைக் கடத்திய பெண்கள் சிறிது தொலைவு சென்றதும் குழந்தையை அங்கேயே விட்டுச் சென்றதாகத் தெரிகிறது.
குழந்தை கடத்தப்பட்ட பகுதியில் 5 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. அவற்றில் கடத்தல் பெண்களின் உருவம் பதிவாகி இருக்கலாம் எனத் தெரிகிறது. அவற்றை ஆராய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் குழந்தை கடத்தல் கும்பலைப் பிடிக்க போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர்.கடத்தப்பட்ட சிறிதுநேரத்திலேயே குழந்தையை மீட்ட சேலம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை பாராட்டைப் பெற்றுள்ளது.