சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இளம்பிள்ளைக்கு  தனியார் பேருந்து ஒன்று கிளம்பியது.  வேம்படிதாளம் வழியாக செல்லும் அப்பேருந்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்தை ஓட்டுநர் கார்த்தி என்பவர் இயக்கினார். பேருந்து கிளம்பியதும் நடத்துனர் பயணிகளிடம் டிக்கெட் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பேருந்து கிளம்பி செல்லத்தொடங்கியதும் திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. புகை அதிகளவில் வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்தி, உடனடியாக பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். அதைத்தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவருக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் வெளியேறிய சில விநாடிகளில் பேருந்து முழுவதும் தீ பிடித்து எரிய தொடங்கியது. மளமளவென பற்றிய தீ, பேருந்து முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின் நடந்த விசாரணையில் என்ஜினில் ஏற்பட்ட எலக்ட்ரிக் ஷாக்கால் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது. பேருந்து ஓட்டுனரின் சாமர்த்திய செயல்பட்டால் 50 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மருமகள் மீது மாமனாருக்கு இருந்த விபரீத ஆசை..! உல்லாசத்திற்கு மறுத்ததால் வெட்டிக்கொன்ற கொடூரம்..!