தனது தலைமுடியை விற்று குழந்தையின் பசியை போக்கி... மீத பணத்தில் விஷம் வாங்கி தற்கொலைக்கு முயன்ற தாய்..!

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது (37). இவரது மனைவி பிரேமா. இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், வீமனுார் பகுதியில், கடந்த  2015-ம் ஆண்டு செங்கல் சூளையில் பணியாற்றினர். பின்னர், நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி 4.50 லட்சம் வரை செல்வம் கடன் வாங்கி செங்கல் சூளை வைத்து அதில் பெரும் நஷ்டம் அடைந்தார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் 7 மாதங்களுக்கு முன் செல்வம் தற்கொலை செய்து கொண்டார். 

Baby's Hungry...mother sale his hair

சேலத்தில் 3 குழந்தைகளின் பசியை போக்க, தலைமுடியை விற்பனை செய்து உணவு வழங்கியதோடு, மீதமிருந்த பணத்தில் தற்கொலை செய்ய முடிவெடுத்த தாயின் சோகம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம் வயது (37). இவரது மனைவி பிரேமா. இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், வீமனுார் பகுதியில், கடந்த  2015-ம் ஆண்டு செங்கல் சூளையில் பணியாற்றினர். பின்னர், நண்பர் ஒருவரின் ஆலோசனையின் படி 4.50 லட்சம் வரை செல்வம் கடன் வாங்கி செங்கல் சூளை வைத்து அதில் பெரும் நஷ்டம் அடைந்தார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் 7 மாதங்களுக்கு முன் செல்வம் தற்கொலை செய்து கொண்டார்.

Baby's Hungry...mother sale his hair 

இவர்களுக்கு  உறவினர்கள் உட்பட யாரும் உதவ முன் வரவில்லை. இவரது மனைவி பிரேமா, அருகில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஏற்கனவே, கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் தற்போது பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், மனம் உடைந்த பிரேமா கடந்த வாரம் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார். 

இந்நிலையில், தனது மூன்று குழந்தைகள் பசியால் துடித்ததால் தன் தலையை மொட்டை அடித்து அந்த முடியை விற்பனை செய்து தனது குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளார். பின்னர், மீதமிருந்த பணத்தில் தற்கொலை செய்வதற்காக விஷம் வாங்கியுள்ளார். இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பாலா என்ற இளைஞர் இந்த உன்னத தாயான பிரேமாவை சந்தித்து அவருக்கும் அவரது குழந்தைகளுக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

Baby's Hungry...mother sale his hair

இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த பாலா என்பவர் தனது முகநூல் பக்கத்தில், பிரேமா படும் இன்னல்கள் குறித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதனை பார்த்த பலரும் அவருக்கு உதவ முன்வந்தார்கள். இதையடுத்து பிரேமாவிற்கு கடன் கொடுத்தவர்களிடம் பேசி பணத்தை கொடுக்கும் நடவடிக்கை மேற்கொண்டர். பாலா முகநூல் பக்கத்தில் பதிவிட்டதன் மூலம், 1 லட்சத்திற்கு மேல் பணம் கிடைத்தது. மீதமுள்ள பணத்தை பாலா மற்றும் அவரது நண்பர்கள் ஏற்பாடு செய்து பிரேமாவுக்கு கடன் கொடுத்தவர்களிடம் வழங்கியுள்ளனர். இதற்கிடையில், பிரேமாவுக்கு தொல்லை கொடுத்து வரும் கந்து வட்டி கும்பல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios