திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் ஆளும் அதிமுக..! ஊராட்சி பதவிகளை அள்ளுகிறது..!

சேலம், தேனி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி உட்பட பல இடங்களில் ஆளும் அதிமுகவே வெற்றி பெற்று வருகிறது. இதனால் திமுக தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.

Admk leads in most districts

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2 ம் தேதி எண்ணப்பட்டது. அதில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கிய தேர்தலின் முடிவுகள் தற்போது வெளி வந்த வண்ணம் இருக்கிறது.

Admk leads in most districts

ஆளும் கட்சியான அதிமுக தொடக்கம் முதலே பல இடங்களில் வெற்றி பெற்று வருகிறது. தற்போது வரையிலும் அக்கட்சி 47 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் 6 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளையும் கைப்பற்றி இருக்கிறது. திமுக 21 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளையும் 5 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பல்வேறு இடங்களிலும் சுயேட்சைகளே வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வருகின்றனர்.

Admk leads in most districts

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த குப்பம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல கம்பம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பாஜகவைச் சேர்ந்த பழனிமணி போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சேலம், தேனி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி உட்பட பல இடங்களில் ஆளும் அதிமுகவே வெற்றி பெற்று வருகிறது. இதனால் திமுக தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios