குஷியான அறிவிப்பு... தமிழகத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி... முதல்வர் எடப்பாடி அதிரடி..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

50 percent buses in Tamil Nadu allowed...edappadi palanisamy

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மட்டும் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் 8-ம் தேதியில் இருந்து வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், மால்களை திறக்க அனுமதி அளித்தது.

50 percent buses in Tamil Nadu allowed...edappadi palanisamy

இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதி.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலம் செல்வும், பிற மாநிலத்தில் இருந்து வரவும் இ-பாஸ் அவசியம். அதேபோல், மண்டலங்களுக்கு இடையே இ-பாஸ் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை.

போக்குவரத்தை 8 மண்டலங்களாக  பிரிக்கப்பட்ட விவரம்;-

மண்டலம் 1;- கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்.

மண்டலம் 2;- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் 3;- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் 4;-  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம் 5;-  திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

மண்டலம் 6;-  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம் 7;-  காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம் 8;- சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios