வட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது  தொடர்பான சென்னை வனிலை மையம் கூறுகையில்  அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும். வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும்.  ஆம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கரையை கடந்து விட்டதால் வெப்பம் அதிகரிக்கும். பகல் 11 மணி முதல் 3,30 வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

 தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி , மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.