எல்லை தாண்டியதாக 15 மீனவர்கள் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்..

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

Rameswaram fishermen protest

ராமேஸ்வரத்தில் கடந்த 5 ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் பாக் நீரணைப் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர்.  தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே இரவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இரு படகுகளை சிறைபிடித்து, அதில் இருந்த 15 பேரை கைது சென்றனர். 

மேலும் படிக்க:Chennai- Mysuru Vande Bharat Express: வந்தாச்சு வந்தே பாரத் ரயில்.. சென்னையில் சோதனை ஓட்டம் தொடங்கியது.!

இந்நிலையில் நேற்று காலை நடந்த ராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில் அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி 15 மீனவர்கள் கைது சம்பவத்தை கண்டித்து, இன்று தங்கச்சிமடத்தில் இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க:கோவை டூ குருவாயூர் 150 கி.மீ பயணம்..! மனைவியை கரம் பிடிக்க சைக்கிளில் சென்ற இளைஞர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios