காணிக்கையை வாரி வழங்கிய பக்தர்கள்.. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலகபிரசித்த பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உண்டியல் காணிக்கை ஒரு கோடியே 15 லட்சத்து 19 ஆயிரத்து 204 ரூபாய் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலகபிரசித்த பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி கோவில் உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் 12 நாட்களில் நிரம்பிய உண்டியல்! அள்ள அள்ள தங்கம்! குவிந்த கோடிகள்! வியந்த பக்தர்கள்!
இந்நிலையில் ராமநாதசுவாமி கோவில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றதைத் தொடர்ந்து உண்டியல்கள் நிரம்பியதை அடுத்து நேற்று காணிக்கைகள் எண்ணும் பணி கோவிலின் கிழக்கு கோபுர மண்டபத்தில் நடைபெற்றது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் 500 ஊழியர்கள் மற்றும் ராமேஸ்வரத்தில் உழவாரப்பணி மேற்கொள்பவர்கள் சேலம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சனியால் ஜூன் 30ஆம் தேதி முதல் பணமழையில் நனைய போகும் 5 அதிஷ்ட ராசிகள்...!
நேற்று காலை 9 மணி அளவில் உண்டியல் என்னும் பணி தொடங்கி மாலை 5 மணி அளவில் நிறைவு பெற்றது. மொத்தமாக உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 15 லட்சத்து 19 ஆயிரத்து 204 பணமும் தங்கம் 201 கிராம் 500 மில்லி கிராம் வெள்ளி 4 கிலோ 80 கிராம் வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளதாக கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.