ஒன்றும் இல்லாத நிராயுதபாணியாக நிற்கின்றேன் - ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் குமுறல்
ராமநாதபுரம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 3 முறை முதல்வராக இருந்த நான் ஒன்றும் இல்லாத நிராயுதபாணியாக நிற்கின்றேன் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்றைய பிரசாரத்தின் போது அவர் பேசுகையில், அதிமுக.வில் தொடர்ந்து 12 ஆண்டு காலம் கட்சியின் பொருளாலராக நியமித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை அழகு பார்த்தார்.
பக்கத்துவீட்டு கதவை தட்டி பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த ஆசாமி; அதிர்ச்சியில் அலறிய குடும்ப பெண்
அதே போன்று சாமானியனான என்னை 3 முறை முதல்வர் பதவியில் அமரவைத்தவர். ஆனால் அவர் மறைவுக்கு பின்னர் என்னுடைய முன்னேற்றத்தை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள் எனக்கு எதிராக சதி செய்து, என்னை திட்டமிட்டு கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால் எதுவும் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கும் என்னை பிரதமர் மோடி கூட்டணியில் சேர்த்துக் கொண்டார்.
திமுக ஆட்சி தமிழகத்திற்கே ஒரு சாபக்கேடு; பிரசாரத்தின் போது மத்திய இணை அமைச்சர் காட்டம்
ராமநாதபுரம் தொகுதியை பிரதமர் மோடி எனக்காக விட்டுக் கொடுத்துள்ளார். எந்த தவறும் செய்யாத நான் இன்று உங்களில் ஒருவராக நிறுத்தப்பட்டுள்ளேன். பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழலில் நான் மட்டும் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறேன். ராமநாதபுரம் மக்கள் எனக்கு நியாயம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.