உல்லாசத்துக்கு இடையூறு.. தடையாக இருந்த தந்தையை எரிந்து கொன்ற மகள், உதவிய தாய்..!
ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூரை சேர்ந்தவர் ரவி (45). லாரி ஓட்டுநர். இவரது மனைவி பாக்கியம் (41). இவர்களது மகள் பவித்ராவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். உச்சிப்புளியில் கணவருடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். அப்போது, முருகானந்தம் (32) என்பவருடன் பவித்ரா நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தாய் உடந்தையாக இருந்து வந்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தை மீது பெற்ற மகளே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு
ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூரை சேர்ந்தவர் ரவி (45). லாரி ஓட்டுநர். இவரது மனைவி பாக்கியம் (41). இவர்களது மகள் பவித்ராவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். உச்சிப்புளியில் கணவருடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். அப்போது, முருகானந்தம் (32) என்பவருடன் பவித்ரா நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு தாய் உடந்தையாக இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- கள்ள உறவில் அம்மா.. கேட்டு தொந்தரவு செய்த தந்தை.. பதில் சொல்ல மறுத்த 7வயது மகள் துடிதுடிக்க கொலை..!
தகாத உறவு
இந்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரியவந்ததையடுத்து தந்தை ரவியிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, மனைவி மற்றும் மகளை ரவி கண்டித்துள்ளார். இதனால், இருவரும் தாய், மகள் இருவரும் கோபித்துக்கொண்டு பாட்டி வீட்டில் தங்கினர். மேலும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ரவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். கடந்த 8ம் தேதி போதையில் வீட்டில் தனியாக இருந்த ரவியை முருகானந்தத்தின் உதவியுடன் பாக்கியம், பவித்ரா ஆகியோர் பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
மன உளைச்சலில் குடிபோதையில் இருந்த ரவி தீக்குளித்துவிட்டதாக கிராம மக்களிடம் கூறியுள்ளனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரவியை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வந்த அவரது தம்பி முருகனிடம், பவித்ராவும், பாக்கியமும் தன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததாக ரவி கூறினார். இதை முருகன் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். இதனிடையே சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார்.
போலீஸ் கைது
இதனையடுத்து, செல்போன் ஆடியோ பதிவை ஆதாரமாக வைத்து ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். கொலை வழக்காக பதிவு செய்த ராமநாதபுரம் பஜார் போலீசார் பாக்கியம், முருகானந்தம், பவித்ரா ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை மனைவி மற்றும் மகள் கொலை ெசய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.