திருச்சி ரவுடி துரை தன்னைச் சுற்றி வளைத்த காவலர்களைத் தாக்கியதாகவும் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக போலீசார் துரையைத் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்ததாகவும் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் வம்மல் வனப்பகுதியில் பிரபல ரவுடி துரைசாமியை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.

திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரைசாமி பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் ஆலங்குடி வம்மல் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்படி திருவங்குளம் காட்டுப் பகுதிக்குச் சென்ற போலீசார் ரவுடி துரைசாமியை சுற்றி வளைத்தனர். காவல்துறையினரைக் கண்டதும் துரைசாமி தப்பி ஓட முயன்றதாகவும் விரட்டிப் பிடிக்க முயன்ற காவலர்களை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் பஸ், ரயிலில் செல்ல ஒரே டிக்கெட் போதும்! டிசம்பர் முதல் ஆரம்பம்!

இதனால், போலீசார் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்வதற்காக துரைசாமியை என்கவுண்டர் செய்ததாகவும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. துப்பாக்கியசால் சுட்டப்பட்ட துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தன்னைப் பிடிக்க வந்த போலீசாரை ரவுடி துரை பட்டா கத்தியால் தாக்கியுள்ளார். இதில் ஆலங்குடி எஸ்.ஐ.க்கு வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற காவலர்களையும் துரை தாக்க வந்ததால், ஒரு முறை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்துள்ளனர்.

ஆனால், துரை அடங்காமல் தொடர்ந்து தாக்க முயன்றதால் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்ட்ர் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த எஸ்.ஐ. மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரைசாமி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

திருச்சியில் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரவுடி துரை மீது 5 கொலை வழக்குகள் கிட்டத்தட்ட 70 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

பூவிருந்தவல்லி சிறையில் சிக்கிய குட்டி செல்போன், 3 பேட்டரி! ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் புதிய திருப்பம்!