குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்.. புதுக்கோட்டை வழக்கு சிபிசிஐடிக்கு அதிரடி மாற்றம்.!!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Pudukkottai drinking water tank issue case was transferred to CBCID

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி அமைந்துள்ளது.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கைவயல் தெருவில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்துள்ளனர்.

Pudukkottai drinking water tank issue case was transferred to CBCID

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

இந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டபோது, அங்குள்ள கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது.

இதனை அறிந்த  மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிட மக்களை அழைத்து கோயிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், இரட்டை குவளை முறையை பின்பற்றிய டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக, 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Pudukkottai drinking water tank issue case was transferred to CBCID

விவகாரம் தொடர்பாக விசாரிக்க திருச்சி சரக டிஐஜி தரப்பில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 11 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி துறையினருக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க..நாட்டு நாட்டு பாட்டுக்கு இவங்க ஆடியிருக்காங்களா.? ஆச்சர்யப்பட்ட ஆனந்த் மஹிந்திரா - வைரல் வீடியோ!

இதையும் படிங்க..சேது சமுத்திர திட்டத்தால் எந்த பயனும் இல்லை.. யாருக்கு பயன் தெரியுமா? திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios