புதுக்கோட்டையில் பாஜக பிரமுகர் வீட்.டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை எறு்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நம்பூரணிப்பட்டியில் நடராஜன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் பாஜகவில் வெளிநாடு பிரிவு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மரம் நபர்கள் வீட்டில் குண்டை வீசியுள்ளனர். 

நள்ளிரவு நேரம் என்பதால் அனைவரும் உறக்கத்தில் இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.