புதுக்கோட்டையில் விமரிசையாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்; சீறிப் பாய்ந்த காளைகள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் விமரிசையாக நடைபெற்றது. சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

minister ragupathi started a rekla race in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாபட்டியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மொத்தம் 35 ஜோடி மாட்டு வண்டிகள்  பங்கேற்ற பந்தயம் 3 சுற்றுகளாக நடைபெற்றது. பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு வெற்றிகோப்பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

ஓசூரில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சம்: கிராம மக்கள் அச்சம்

இந்த பந்தயத்தில் மதுரை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டிற்கு கடியாபட்டியிலிருந்து ராயவரம் வரை என 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற போட்டியில் 11 ஜோடிகள் கலந்துகொண்டன. 

9 கிலோ மீட்டர்  தொலைவிற்கு சிறிய மாட்டுவண்டி வகையில் நடைபெற்ற போட்டியில் 24 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெறவேண்டும் என்ற வெறியுடன்‌ ஒவ்வொரு வண்டியும் சீறிப் பாய்வதை சாலையின் இரு புறமும் கூடியிருந்த பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மேலும் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பார்வையாளர்கள் கை தட்டியும், விசில் அடித்தும் உற்சாகப்படுத்தினர். 

ஜன. 31ல் தொடங்குகிறது டெட் இரண்டாம் தாளுக்கான தேர்வு 

பெரிய மாட்டு வண்டிக்கான போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். சிறிய மாட்டிற்கான போட்டியை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios