பெற்ற மகளை அடைய மனைவியை கொன்ற காமக்கொடூரனுக்கு மரண தண்டனை... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...!

புதுக்கோட்டையில் மனைவியை கொன்று  விட்டு மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்து அம்மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Death penalty for father who raped his own daughter and killing wife

புதுக்கோட்டை அருகே தென்திரையான்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன், இவருக்கு 3 மனைவியும், 11 மகள்களும் உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு முருகேசனின் 2வது மனைவில் ஆடு மேய்க்க சென்றபோது மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகின. 

Death penalty for father who raped his own daughter and killing wife

முருகேசன் தனக்கும்,  2வது மனைவிக்கு பிறந்த 17 வயது மகளை கடந்த 2017ம் ஆண்டு முதல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதுபற்றி வெளியே யாரிடமாவது சொன்னால் உன் அம்மாவை கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வரும் விவகாரம், முருகேசனின் முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளுக்கு தெரியவந்தது. 

Death penalty for father who raped his own daughter and killing wife

இதையடுத்து முருகேசனிடம் 2வது மனைவி தகராறு செய்துள்ளார். மனைவியை கொன்றால் தான் மகளை அடைய முடியும் என கொடூர திட்டம் திட்டிய முருகேசன், தன்னுடைய 2வது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 2019ம் ஆண்டு ஆடு மேய்க்க சென்ற மனைவியை கொலை செய்துள்ளார். முருகேசனை கைது செய்த காவல்துறையினர் மனைவியை கொன்றதற்காகவும், 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

Death penalty for father who raped his own daughter and killing wife

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா, மனைவியை கொடூரமாக கொன்றதும், மகளை பாலியல் வன்கொடுமை செய்ததும் முருகேசன் தான் என்பது உறுதியானதாக அறிவித்தார். இவ்விரு குற்றங்களுக்காகவும் முருகேசனுக்கு மரண தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார்.

Death penalty for father who raped his own daughter and killing wife

மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஆயுள் தண்டனையும், ஒரு லட்சமும் அபராதமும், மற்றொரு பிரிவின் கீழ் பதியப்பட்ட வழக்கிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் ஒரு பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios