62 முறை டயாலிசிஸ் செய்தவருக்கு கொரோனா.. சாவின் விளிம்பில் இருந்து இளைஞரை மீட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவமனை
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 62 முறை டயாலிசிஸ் செய்த இளைஞரை கொரோனா பாதிக்கப்பட்டு சாவின் விளிம்பில் இருந்த நபரை மீட்ட அரசு மருத்துவருக்கும், தமிழக அரசுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.
![Corona for a young man who has dialysis 62 times..pudukottai government meical college Corona for a young man who has dialysis 62 times..pudukottai government meical college](https://static-gi.asianetnews.com/images/01ecpgx38033qhzhdsrrv15tkj/img-20200708-wa0022-jpg_363x203xt.jpg)
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் 62 முறை டயாலிசிஸ் செய்த இளைஞரை கொரோனா பாதிக்கப்பட்டு சாவின் விளிம்பில் இருந்த நபரை மீட்ட அரசு மருத்துவருக்கும், தமிழக அரசுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மகன் மகேஷ் வில்லியம்ஸ் (18). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த காரணத்தினால் இதுவரை 62 முறை டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளார். ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த மகேஷ் வில்லியம்ஸால் டயாலிசிஸ் செய்ய பணம் இல்லாத காரணத்தினால் 5 லட்சம் கடன் வாங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மகேஷ் வில்லியம்ஸ்க்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டதையத்து தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். மேலும், புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதயைடுத்து, மகேஷ் வில்லியம்ஸை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனமதித்தனர்.
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் கொடுத்த உத்வேகத்தின் காரணமாக மிகுந்த மகிழ்ச்சியான நபராக மாறினார் மகேஷ் வில்லியம்ஸ். இதையடுத்து அவருக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் பொருட்டு ராணியார் மருத்துவமனைக்கு பிரத்யேக டயாலிசிஸ் கருவி கொண்டு வரப்பட்டு டாயலிசிஸ் செய்யப்பட்டும் அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ்கான சிறப்பு மருத்துவத்தையும் மருத்துவர்கள் கவனித்து வந்தனர்.
கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மகேஷ் வில்லியம்ஸ் தற்பொழுது தொற்று இல்லாத இளைஞராக மாறி வீடு திரும்பியுள்ளார். மிகுந்த சவாலான இந்த சூழ்நிலையில் வாலிபரின் உயிரை காப்பாற்ற புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் புதிய டயாலிசிஸ் மிஷினை வரவழைத்து அதன் மூலம் இளைஞரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் அவரது குடும்பத்தினரை நெகிழ வைத்துள்ளது. மேலும், சாவின் எல்லைக்குச் சென்ற எனக்கு மீண்டும் உயிரை மீட்டு கொடுத்த தமிழக அரசுக்கும் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கும் தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.