பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு கிராமத்தை சேர்ந்தவர் நிவேதா(20) . இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்திருக்கிறார். தினமும் வீட்டில் இருந்து நிவேதா கல்லூரி சென்று வருவாராம்.

சம்பவத்தன்றும் வீட்டில் இருந்து நிவேதா கல்லூரிக்கு சென்றிருக்கிறார். ஆனால் மாலை கல்லூரி முடிந்து வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர், பல இடங்களில் தேடி பார்த்திருக்கின்றனர்.அவர் படிக்கும் கல்லூரி இருக்கும் இடம் மற்றும் அவரின் தோழிகள் வீடுகளிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் நிவேதாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனால் காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்தனர். அதன்படி நிவேதாவின் பெற்றோர் மங்கள மேடு காவல் நிலையிற்கு புகார் அளிக்க சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த காவலர்கள் அந்த புகாரை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

இதனால் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அங்கும் புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் பெற்றோர் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய பெரம்பலூர் நகர காவல்துறை ஆணையாளர் அழகேசன், மாணவி காணாமல் போனது குறித்த விசாரணை நடந்து வருவதாக கூறினார்.