Asianet News TamilAsianet News Tamil

பெரம்பலூர் பாலியல் புகார்... அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு விருந்தாக்கிய காமக்கொடூரன்கள்... வெளியானது அதிர்ச்சி ஆடியோ..!

பொள்ளாச்சி சம்பவத்தை போன்றே பெரம்பலூரிலும் பாலியல் கொடுமை குறித்த புகார் சமீபத்தில் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கு தொடர்பு இருக்கிறது. இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த ஆடியோவால் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

perambalur issue...AIADMK MLA
Author
Tamil Nadu, First Published Apr 26, 2019, 10:57 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

பொள்ளாச்சி சம்பவத்தை போன்றே பெரம்பலூரிலும் பாலியல் கொடுமை குறித்த புகார் சமீபத்தில் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கு தொடர்பு இருக்கிறது. இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும்" என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த ஆடியோவால் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. perambalur issue...AIADMK MLA

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மற்றும் அவரது போலி நிருபர் ஆகிய இருவரும் இணைந்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்கள் பலரை அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். பின்னர் அவர்கள் அதை வீடியோவாக எடுத்து வைத்து பல இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து, கடந்த ஏப்ரல் 21-ம் தேதியன்று வழக்கறிஞர் அருள் என்பவர் பெரம்பலுார் எஸ்.பி., திஷா மிட்டலிடம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இன்று நண்பகல் 12.30 மணியளவில், இந்த பாலியல் கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ ஒன்றையும் வழக்கறிஞர் அருள் வெளியிட்டுள்ளார். 

பெண்: ஹலோ வணக்கம் சார்....

வக்கீல்: ஹலோ சொல்லுங்கம்மா...

பெண்:  நான் இப்போ வெளியே வந்து பேசுறேன். பர்ஸ்ட்ல என்னாச்சுன்னா, பெரம்பலூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள லாட்ஜுக்கு இன்டர்வியூவுக்கு வர சொன்னாங்க. அங்க போனோம், திடீர்னு இங்க இன்டர்வியூ கிடையாது. இன்னொரு ஓட்டலில் இன்டர்வியூனு சொன்னாங்க. சரின்னு சொல்லி மறுபடியும் அங்க போனோம்.

வக்கீல்: ரூம் நம்பர் ஒன் ஒன் போரா (114).

பெண்: ஒன் ஒன் போரா, ஒன் நாட் போரானு தெரியல சார். இன்டர்வியூ முடிஞ்சிருமோ என்னமோனு பதற்றத்தில கிளம்பி போயிட்டோம். அங்க போனா... அவுங்களுடைய நடவடிக்கை வேற மாதிரி இருந்தது.

வக்கீல்: யாருமா அங்க இருந்தா?

பெண்: அங்க 2, 3 பேர் இருந்தாங்க சார். அங்க இன்டர்வியூ நடக்குற மாதிரி தெரியல. பெரிய முதலாளி யாராவது ஹெட் ஆபீஸ்லேருந்து வந்திருப்பாங்களோனு நினைச்சோம். அங்க ரொம்ப வல்கரா பேசுனாங்க. ரொம்ப தப்பாவெல்லாம் நடந்துக்கிட்டாங்க. வாக்குவாதம் நடக்கும்போதே வீடியோவா வேற சூட் பண்ணீட்டாங்க. இதுக்கு ஒத்துழைக்கலனா வீடியோவ நெட்ல போட்டிருவோம்னு சொன்னாங்க. 

என்னா பண்ணனும்னே எனக்கு தெரியல. அப்புறம் என்னன்னா மறுபடியும் கால் பண்ணி, அதிமுக எம்எல்ஏ பெயரை சொல்லி நீ அவர போய் பாக்க போகணும். அவுங்கக்கிட்ட நீ வரணும் என 2, 3 தடவை கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. வர முடியாதுனு சொன்னா என்ன பண்ணுவீங்கனு கேட்டப்போ, உன்னுடைய வீடியோ எல்லாமே இருக்கு. அத கண்டிப்பா நெட்ல ரிலீஸ் பண்ணப்போறோம் அப்புடீனு சொன்னாங்க. அப்புறம் மறுபடியும் அந்த வீடியோவ மறுபடியும் எனக்கே அனுப்பி காட்டி, நீ வா நீ வானு கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. 

வெளியில தெரிஞ்சிருமோ, வீட்டுக்கு தெரிஞ்சிருமோ என பயந்து நான் போனேன். ரொம்ப கட்டாயப்படுத்தி குளிக்க போ என்றனர். குளித்தால் விட்டு விடுவார்கள் என நினைத்து குளிக்க சென்றேன். ஆனால் குளிக்கும்போது எனக்கே தெரியாமல் வீடியோ எடுத்து விட்டனர். அந்த வீடியோவையும் வெச்சு என்ன ரொம்ப பிளாக்மெயில் பண்ணினாங்க. இது வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும். வெளியில சொல்ல முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருந்தேன். ஒரு ஸ்டேஜ்ல சூசைடு அட்டண்ட் பண்ணக்கூட ரெடியாகிட்டேன். ஏன்னா வீட்டில் தெரிஞ்சா குடும்பத்தோட சாவாங்க.

வக்கீல்: அப்படியெல்லாம் பண்ணக்கூடாதும்மா... வீடியோ எடுத்த பையன் யார்?

பெண்: வேலுனு நினைக்கிறேன். பேரு சரியா தெரியலை.

வக்கீல்: நீங்க மட்டும்தான் அதில் இருந்தீங்களா வேற யாராவது இருக்காங்களா

பெண்: நிறைய புள்ளங்களை(மாணவிகள்) இப்படித்தான் பண்றாங்க.

வக்கீல்: உங்களுக்கு தொடர்ச்சியா த்ரட்டன் இருக்கா,

பெண்: ஆமா இருக்கு. நான் ஏன் எனது பெயர் சொல்ல மாட்டேங்கிறேன். நேர்ல வர மாடடோங்கிறேன்னா ரொம்ப மிரட்டுறாங்க. வீட்ட விட்டு வெளியே போக முடியலை, 2 நாளா சொந்தக்காரங்க வீட்டில் தங்கி இருக்கோம். என் பெயர் வெளியில் வரக்கூடாது.

வக்கீல்: உச்சநீதிமன்ற தீர்ப்புபடி பெயர் வெளியிட்டால் அவங்க மேல லீகல் ஆக்‌ஷன் எடுப்பாங்க. அதனால உங்க பேரை வெளியிட மாட்டோம். இது பொள்ளாச்சிய மிஞ்சிய சம்பவம். இவ்வாறு உரையாடல் நடந்தது. ஆடியோ வெளியிட்டதால் தனக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் வக்கீல் கேட்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios