தோண்ட தோண்ட கிடைத்த டைனோசர் முட்டைகள்.. மிரள வைத்த எண்ணிக்கை.. மிரண்டு போன அதிகாரிகள்..!

12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

perambalur Dinosaur eggs found

12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர்களின் முட்டைகள் தமிழ்நாட்டின் பெரம்பலூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகே உள்ள ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏரியில் இருந்து மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பூமிக்குள் புதைந்திருந்த டைனோசர் முட்டை மற்றும் கடல்வாழ் உயிரின படிமங்கள் வெளிப்பட்டுள்ளன.

perambalur Dinosaur eggs found

அதில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை போன்ற உருவங்களில் படிமங்கள் கிடைத்தன. இவைகள் டைனோசர் முட்டைகளின் படிமங்கள் என்றும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நத்தை, ஆமை, கல்மரத்துண்டுகள், நட்சத்திர மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களில் படிமங்கள் என்றும் கூறப்படுகிறது.

perambalur Dinosaur eggs found

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூரில் எம்.எஸ்.கிருஷ்ணன் என்ற புவியியல் ஆய்வாளர், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்மரம் ஒன்றை கண்டறிந்தார். அதன்பின்னர் பல கல்மரத்துண்டுகள் அப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிரிடேசியஸ் காலத்து மரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த பகுதி ஒரு காலத்தில் கடலாக இருந்ததற்கான சான்றாக இது பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த டைனோசர் முட்டைகள் சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios