Asianet News TamilAsianet News Tamil

பெரம்பலூரில் தொழிலதிபரின் வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை - காவல் துறை விசாரணை

பெரம்பலூரில் தொழிலபதிரின் வீட்டின் ஜன்னல் மற்றும் கிரிலை உடைத்து பணம் மற்றும் நகைகைளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

money and jewellery theft in businessman's house in perambalur
Author
First Published May 10, 2023, 12:17 PM IST

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலை, ரோஸ் நகரில் வசித்து வருபவர் சையது முகமது  மகன் சாகித் அப்ரிடி (வயது 25). இவர் அதே பகுதியில் கடந்த 4 வருடங்களாக பெற்றோருடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே "ரெயின் போ ஜெராக்ஸ்" என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தினமும் காலை  9.30 மணிக்கு சாகித்தும் அவரது தந்தையும் கடைக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் சாகித்தும் அவரது தந்தையும் நேற்று காலை கடைக்கு சென்றுவிட  வீட்டில் அவரது தாயார் தனது உறவினரின் வீட்டு விசேஷத்திற்காக வெளியூருக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னல் மற்றும் இரும்பு கம்பியை உடைத்து பணம் மற்றும் நகைகைள கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

பின்னர் இரவு 10.30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த சாகித் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டும்  பீரோ திறந்து இருப்பதையும் கண்டு அதிர்ந்தடைனர். இது தொடர்பாக பெரம்பலூர் நகர காவல் துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் வீட்டின் பீரோவிலிருந்த 90 ஆயிரம் பணமும் 3/4 சவரன் நகை மற்றும் 5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு மோப்ப நாய் பிரிவு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.. 

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை  பெரம்பலூரில் இது போன்று  கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் காவல்துறையினர் தங்கள் ரோந்து பணியினை தீவிர படுத்திய பின்னர் இரு மாதங்களாக கொள்ளை சம்பவங்கள் குறைந்தது. இருப்பினும் தற்போது கடந்தசில நாட்களில் இது போன்று கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெரம்பலூர் நகர பகுதியில்  பொதுமக்களிடையே மீண்டும் அச்சம் எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios