Asianet News TamilAsianet News Tamil

பெரம்பலூரில் நவ.28, 29ம் தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை... காரணம் இதுதான்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பெரம்பலூரில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

drones are banned from flying in perambalur on nov 28 and 29
Author
First Published Nov 26, 2022, 11:51 PM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பெரம்பலூரில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 28 ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அதை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்படும் முதல்வர் மு.கஸ்டாலின், திருச்சி காட்டூரில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் சக்கரங்களில் அறிவியல் என்ற நிகழ்ச்சியினை துவக்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெரம்பலூருக்கு சென்று அங்கு வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார்.

இதையும் படிங்க: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க ஏற்பாடு... நவ.28 முதல் டிச.31 வரை சிறப்பு முகாம்!!

பின்னர் விருந்தினர் மாளிகையில் மதியம் உணவு சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அதைத்தொடர்ந்து மாலை 4 மணியளவில் பெரம்பலூரில் இருந்து புறப்பட்டு அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள மாளிகைமேட்டுக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அரியலூர் விருந்தினர் மாளிகையில் இரவு உணவை முடித்து கொண்டு, அங்கு ஓய்வெடுக்கிறார்.

இதையும் படிங்க: அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமா? அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!!

மறுநாளான 29 ஆம் தேதி அரியலூர் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரியலூர் அருகே கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பெரம்பலூர் வழியாக கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நவ.28, 29 ஆம் ஆகிய தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios