'அதுவா போகட்டும்.. தொந்தரவு பண்ணாதீங்க'..! குட்டியை பறிகொடுத்து பரிதவிக்கும் காட்டு யானை..!

குட்டியானையின் உடலை மீட்க வனத்துறை காவலர்கள் அதனருகே சென்ற போது, மூன்று யானைகளும் ஆக்ரோஷமடைந்து அவர்களை விரட்டியுள்ளது. இதனால் நேற்று முன்தினம் குட்டி யானை உடலை மீட்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறினர். நேற்று காலையில் மீண்டும் முயற்சி செய்தபோது தாய் யானை, குட்டி யானையை விட்டு விலகாமல் அங்கேயே நின்றிருந்தது.

wild elephant roaming near its cub's deadbody

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இருக்கிறது பள்ளிப்படி மலைக்கிராமம். இங்கு ஏராளமான எஸ்டேட்கள் உள்ளன. அதில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் 3 யானைகள் ஒன்றாக நின்றுள்ளன. அதைக்கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு குட்டி யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது.

wild elephant roaming near its cub's deadbody

அதைச்சுற்றி அதன் தாய் யானை மற்றும் இரண்டு யானைகள் நின்றுகொண்டிருந்தன. குட்டியானையின் உடலை மீட்க வனத்துறை காவலர்கள் அதனருகே சென்ற போது, மூன்று யானைகளும் ஆக்ரோஷமடைந்து அவர்களை விரட்டியுள்ளது. இதனால் நேற்று முன்தினம் குட்டி யானை உடலை மீட்க முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறினர். நேற்று காலையில் மீண்டும் முயற்சி செய்தபோது தாய் யானை, குட்டி யானையை விட்டு விலகாமல் அங்கேயே நின்றிருந்தது. இதனால் இரண்டாவது நாளாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

image

இந்தநிலையில் தாய் யானை தானாக திரும்பி காட்டுக்குள் செல்லும் வரை குட்டி யானை உடலை மீட்க வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். அதன்படி அதுவரையில் யானையை யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க வனத்துறை காவலர்கள் அந்த பகுதியில் முகாமிட்டுள்ளனர். குட்டியானை இறந்த சோகத்தில் தாய் யானை அங்கேயே சுற்றி வருவது காண்போரை நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.

'ஆதரவற்றோர்களின் அடைக்கலம்' சிவானந்தா குருகுலம் ராஜாராம் மரணம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios