Tamilnadu Rain: விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!
மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் விடை விடாமல் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் விடை விடாமல் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகத்தின் கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சூழற்சி, தமிழகத்தின் வளிமண்டல பகுதியின் மத்தியில் கிழக்குதிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது போன்ற காரணங்களால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி இயங்கும் பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், சிறுமலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் அறிவித்துள்ளார்.