ஊட்டி கோல்ஃப் மைதானத்தில் புலி; அடுத்தது என்ன? அதிர்ச்சி வீடியோ வைரல்!!
பொதுவாக உலகின் பல இடங்களிலும் வன விலங்குகள் ஊருக்குள் வருவது சகஜமாக நடந்து வருகிறது. இதற்குக் காரணம் பருவநிலை மாற்றம், காடுகள் அழிப்பு, காடுகளில் பற்றி எரியும் தீ, காடுகள் ஆக்கிரமிப்பு என்று கூறப்படுகிறது.
மலைப்பிரதேசங்களிலும் இதுபோன்று அவ்வப்போது நடந்து வருகிறது. ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களில் விலங்குகள் சர்வ சாதரணமாக சாலைகளில் தென்படுவதும், சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தியும் வருகின்றன. யானைகள் மக்கள் செல்லும் வழித்தடங்களில் தென்படுவதும், காடுகளை ஒட்டிய விவசாய நிலங்களில் தென்படுவதும் சகஜமாகி வருகிறது.
நேற்று கூட மைசூர் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று பொதுமக்களை தாக்கும் வீடியோ வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. எங்கிருந்து வந்தது என்று தெரியாமல், பைக்கில் சென்றவரை குறிவைத்து விரட்டியது, பைக்கில் சென்றவர் கீழே விழுந்து தப்பித்தார். மற்றவர்களை குறிவைக்க அவர்களும் தப்பிச் சென்றனர். இப்படி பல இடங்களில் சிறுத்தை, புலி, சிங்கம், கரடி, காண்டாமிருகம் ஆகியவை ஊருக்குள் வருவது மக்களின் அன்றாட வாழக்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
ஆனால், நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் கோல்ஃப் மைதானத்தில் புலி பதுங்கி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே அக்கவுண்ட்ஸ் பணியில் இருக்கும் ஆனந்த் ருபனகுடி என்பவர் இதுதொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது பதிவில், ''கோல்ஃப் மைதானத்தின் எல்லையில் இந்தக் காட்சி பதிவாகியுள்ளது. புலி தனக்கான உணவுடன் அங்கு இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊருக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கும் சிறுத்தை… பதைபதைக்க வைக்கும் வீடியோ!!
அவர் பதிவிட்டு இருக்கும் வீடியோவில் ஒரு பசு மாடு இறந்து கிடக்கிறது. ஏற்கனவே அந்த பசுவை புலி கொன்று உணவாக உண்டு இருக்க வேண்டும் என்று தெரிகிறது. மேலும், அந்தப் பசு அருகில் வந்து நின்று கொண்டு வேடிக்கை பார்க்கிறது. வீடியோ எடுப்பவரை பார்த்து விட்டதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். பலரும் லைக் செய்து வருகின்றனர்.
மக்கள் குடியிருப்புக்கு அருகில்தான் கோல்ஃப் மைதானம் இருக்கிறது. மக்கள் இருப்பிடத்தை புலி ஆக்ரமித்ததா? அல்லது வன விலங்குகளின் இடத்தை மக்கள் ஆக்ரமித்தார்களா? என்பது தெரியவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். தங்களது பதிவில் பலரும், ''வன விலங்குகளின் இடத்தை ஆக்கிரமித்து மக்கள் கோல்ஃப் மைதானம் அமைத்துள்ளனர்'' ''அவர்களது நிலத்தை நாம் எடுத்துக் கொண்டுள்ளோம்'' ''கோல்ஃப் மைதானத்தின் எல்லை கிடையாது அது, வனத்தின் எல்லையில் கோல்ஃப் மைதானம் அமைக்கப்பட்டு இருக்கிறது'' ''நான் இந்த கோல்ஃப் மைதானத்தில்தான் விளையாடி இருக்கிறேன். அதிருஷ்டவசமாக இந்த அற்புத விலங்கை பார்த்தது இல்லை'' என்றும் பதிவிட்டுள்ளனர்.
Cobra bites boy: 8 வயது சிறுவன் கடித்து விஷப் பாம்பு பலி! சத்தீஸ்கரில் வினோதம்!