Watch : டாஸ்மாக்கில் கொள்ளை முயற்சி! போலீஸ் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் சிக்கினார்!
கூடலூர் அருகே அதிகாலையில் வேளையில் கேரளா பதிவு எண் கொண்ட மாருதி ஸ்விப்ட் காரில் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை காவல் துறையினர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் இரவு நேரத்தில் கூடலூர் சிறப்பு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குந்தலாடி டாஸ்மாக் கடையை உடைக்க முயற்சி செய்த இருவரை காவலர்கள், மடக்கி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கொள்ளையர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட, தற்காப்புக்காக காவலர்கள் குற்றவாளிகளை துப்பாக்கி சூடு நடத்தி மடக்கிப் பிடித்தனர். இதில் மணி என்ற சாம்பார் மணி, காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
கூடலூர் பகுதி கேரளா மற்றும் கர்நாடகா எல்லையை ஒட்டி உள்ளதால் மாவோயிஸ்டுகள் மற்றும் கடத்தல் காரர்கள் அதிகம் நடமாட கூடும் என்பதால் இரவு நேர காவலர்கள் துப்பாக்கிகள் தற்காப்புக்காக பயன்படுத்துவதாக தெரிகிறது
மேலும் காயம் அடைந்த காவலர்கள் சியாபுதீன் மற்றும் அன்பழகன் ஆகிய இருவரையும் காயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நீலகிரி மாவட்ட எஸ்பி முனைவர் பிரபாகரன் தற்பொழுது சம்பவம் நடந்த கூடலூர் குந்தலாடி பகுதிக்கு விசாரணைக்காக சென்றுள்ளார், மேலும் கூடலூர் டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் சுட்டுபிடிக்கப்பட்ட மணி என்ற சாம்பார் மணி ஏற்கனவே பல வழக்குகளில் உள்ள குற்றவாளி என்றும் மேலும் தப்பியோடிய நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்