உதகை ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் ஜோடியாக உலா வரும் சிறுத்தைகளால் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆட்சியர் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தைகளை பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் உலா வருவது தொடர்ச்சியான ஒன்றாக தான் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சியர் குடியிருப்பு வளாகம் மற்றும் விருந்தினர் மாளிகை முன்பு சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது.
நேர்மையான அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு; விண்ணப்பிக்க இன்றே கடைசி: நூதன போஸ்டரால் சலசலப்பு
இந்த நிலையில் தற்போது தமிழகம் விருந்தினர் மாளிகையில் இருந்து ஆட்சியர் குடியிருப்புக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் இரண்டு சிறுத்தைகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் போக்சோவில் கைது
ஒரே நேரத்தில் இரண்டு சிறுத்தைகள் ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் உலா வருவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறும் முன் வனத்துறையினர் கண்காணித்து சிறுத்தைகளை பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.