ஊட்டி அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஊட்டி அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூரில் உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தயானந்தன்(வயது 31). இவர் எஸ்டேட் நிர்வாகம் அளித்த குடியிருப்பில் தங்கி இருந்தார். இதற்கிடையே தயானந்தனுக்கும், மேலூர் ஒசட்டி கிராமத்தை சேர்ந்த வினோதினி(21) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. 

பின்னர் கணவன்-மனைவி இருவரும் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா். இவர்களுக்கு அந்த தோட்ட நிறுவனத்தின் குடியிருப்பு வழங்கப்பட்டு வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல ஊழியர்கள் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்தனர். ஆனால், தயானந்தனின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், கதவை தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. 

இதனையடுத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து எஸ்டேட் நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்குத் திருமணமாகி 6 மாதங்கள்கூட முடிவடையாததால் இது தொடர்பாக கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.