உதகையில் கேரட் சுத்தம் செய்யும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி பலி; போலீசார் விசாரணை
நீலகிரி மாவட்டத்தில் கேரட் சுத்தப்படுத்தும் தொழிற்சாலையில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கேரட் பயிரிடப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட கேரட்களை மூட்டைகளாக கட்டி, கேரட் கழுவும் இயந்திரங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இயந்திரங்களில் முழுமையாக கழுவிய பின், சுத்தம் செய்யப்பட்ட கேரட் மூட்டைகளாக கட்டப்பட்டு, லாரிகளில் ஏற்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
ஒரு சீட்டுக்காக கமலஹாசன் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார் - செல்லூர் ராஜூ விமர்சனம்
இந்நிலையில் உதகை அருகே உள்ள முள்ளிக்கொரை பகுதியில் கேரட் கழுவும் இயந்திரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தம்பா (வயது 35) பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் தம்பாவின் தலை மற்றும் கை சிக்கியது. உடனே அங்கிருந்து தொழிலாளிகள் இயந்திரத்தை நிறுத்தி தம்பாவை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொழிலாளி ஒருவர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தது சக தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த கேரட் இயந்திரத்தில் இருந்து வரும் ஆபத்தான கழிவுநீரை சுத்திகரிக்கப்படாமல் மழைநீர் கால்வாய்களில் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தொழிலாளிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.