Asianet News TamilAsianet News Tamil

BipinRawat: குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து.. முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நிலைமை என்ன?

குன்னூர் அருகே ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  முப்படைகளின் தலைவர் பிபின் ராவத்தும் பயணித்ததாகவும் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

Helicopter crash in Coonoor .. What is the situation of Brigadier General BipinRawat?
Author
Neelagiri, First Published Dec 8, 2021, 2:20 PM IST

குன்னூர் அருகே ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  முப்படைகளின் தலைவர் பிபின் ராவத்தும் பயணித்ததாகவும் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 

கோவையில் இருந்து குன்னூர் நோக்கி சென்ற ராணுவ ஹெலிகாப்டரில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, பைலட்கள் 4 பேர் மற்றும் 9 ராணுவ வீரர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. 

Helicopter crash in Coonoor .. What is the situation of Brigadier General BipinRawat?

இந்த சம்பவத்தில் 7 பேர் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குறித்த விவரம் வெளியாகவில்லை. அதில் பயணம் செய்த பிபின் ராவத் உயிரிழந்திருக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் அஞ்சப்படுகிறது. ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Helicopter crash in Coonoor .. What is the situation of Brigadier General BipinRawat?

விமானத்தில் பயணித்தவர்கள் விபரம்

01. முப்படை தளபதி விபின் ராவத்
02. மதுலிகா ராவத்
03. பிரிகேடியர் லிடர்
04. லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
05. குர்சேவர் சிங்
06. ஜிஜேந்தர் குமார்
07. விவேக் குமார்
08. சார் தேஜா
09. கவில்தார் சத்பால்

Follow Us:
Download App:
  • android
  • ios