Helicopter Crash: பனி மூட்டத்தில் மறைந்த ஹெலிகாப்டர்... சுற்றுலா பயணிகள் எடுத்த பகீர் வீடியோ..!
விபத்துக்குள்ளாகும் முன்பு கடுமையான மேகமூட்டத்திற்கிடையே பறந்த ராணுவ ஹெலிகாப்டர் குறித்த காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில் மோசமான வானிலையில் மேகமூட்டத்திற்கிடையே சென்ற ஹெலிகாப்டர் ஒருகட்டத்தில் மறைகிறது.
மோசமான வானிலை காரணமாகவே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விழுவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன்னில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் 12 பேர் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து எம்.ஐ 17 வி 5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். இந்த ஹெலிகாப்டர் 5 நிமிடங்களில் தரையிறங்க உள்ள நிலையில் காட்டேரி பார்க் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
ஒன்றரை மணிநேரத்திற்கு விடாமல் தீப்பற்றி எரிந்துள்ளது. மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே தீ அணைக்கப்பட்டு மீட்புப்பணிகள் நடைபெற்றன. இந்த விபத்தில் பிபின் ராவத்தின் மனைவி உட்பட 13 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இதில் கேப்டன் வருண் சிங் மட்டும் 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முப்படைகளின் தலைமைத் தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கருப்பு பெட்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்துக்குள்ளாகும் முன்பு கடுமையான மேகமூட்டத்திற்கிடையே பறந்த ராணுவ ஹெலிகாப்டர் குறித்த காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில் மோசமான வானிலையில் மேகமூட்டத்திற்கிடையே சென்ற ஹெலிகாப்டர் ஒருகட்டத்தில் மறைகிறது. விபத்து ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக தாழ்வாக பறந்த விமானத்தை அங்கு சுற்றுலா சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
"
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்தது என்பது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை.