நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் பாஜக.வுடன் கூட்டணி வைத்திருப்போம் - பழனிசாமி பேச்சு
ஆட்சி அதிகாரித்திற்கு ஆசை பட்டிருந்தால் பா. ஜ. கவுடன் கூட்டணி வைத்திருக்கலாம், ஆனால் நாங்கள் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம் என மேட்டுப்பாளையத்தில் நடந்த அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டுமே இந்தியா கூட்டணியில் திமுக இணைந்துள்ளது.
அதிமுகவை பொறுத்தவரை பதவி சுகத்திற்கான கட்சி அல்ல, நாங்கள் ஆட்சி அதிகாரித்திற்கு ஆசை பட்டிருந்தால் பா. ஜ. க.வுடன் கூட்டணி வைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் மக்களின் மனநிலையை அறிந்து கூட்டணியில் இருந்து வெளியேறி மக்களுடன் கூட்டணி வைத்துள்ளோம். இந்தியா கூட்டணி யில் யார் பிரதமர் என முடிவு செய்ய கூட முடியாத கூட்டணி. முதல் கூட்டத்திலேயே நிதிஷ்குமார் வெளியேறியதை சுட்டி காட்டிய எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் கூட்டணி வைத்துள்ள ஆம் ஆத்மி, பஞ்சாப் மாநிலத்தில் தனித்து போட்டி. அதேபோல கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி பிளவு என ஒற்றுமை இல்லாத கூட்டணி இந்தியா கூட்டணி என விமர்சித்தார்.
பிரசாரத்தின் போது புரோட்டா சுட்டு ஒரே இலையில் சாப்பிட்ட ராஜேந்திர பாலாஜி, விஜய பிரபாகரன்
மேலும் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராசா கண்ணில் தெரியாத காற்றிலேயே ஊழல் செய்தவர். அதற்காக மந்திரியாக அதே அரசாங்கத்தால் கைது செய்யபட்டு சிறை சென்றவர். தற்போது அந்த வழக்கு மீண்டும் சி. பி. ஜ விசாரணைக்கு எடுக்க பட்டுள்ளது. மேலும் திமுக ஒரு குடும்ப கட்சி. அதில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் தலைவராக வர முடியாது. ஆனால் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் உயர் பதவிக்கு வர முடியும். அப்படிபட்ட ஜனநாயகம் உள்ள கட்சி அதிமுக தான்.
அதிமுக ஆட்சியில் 1652 கோடி மதிப்பில் முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியால் அவிநாசி, அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட்டது. அது அதிமுக ஆட்சியில் 80 சதவிகிதம் முடிந்த நிலையில் திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக காலம் கடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.