மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் கல்லூரி நண்பர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கிராமப்புறங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 52 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கடநாடு பகுதியை சேர்ந்தவர் போஜன்(89) ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் திருச்சி ஜோசப் கல்லூரியில் போஜன் ஒன்றாக படித்தவர். இதனால், அப்துல்கலாமின் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். 

அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் ஊட்டிக்கு 2006ம் ஆண்டுக்கு வருகை தந்தார். அப்போது, போஜா கவுடரை மேடைக்கு அழைத்து, கல்லுாரி நினைவுகளை கூறி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அப்துல் கலாமின் டாட்டர்ஸ் ஆப் இந்தியா எனப்படும் பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் நீலகிரி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார். வயது மூப்பு காரணமாக போஜன். கடந்த சில ஆண்டுகளாக வீட்டிலிருந்தார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.