3வது அலை வந்துவிட்டதா? அடுத்தடுத்து ஆட்சியருக்கு கொரோனா.. பீதியில் பொதுமக்கள்..!
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 20 என்ற அளவிலேயே உள்ளது.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது முகாம் அலுவலகத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 20 என்ற அளவிலேயே உள்ளது. கொரோனா பரவல் பெருமளவு குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சுற்றுலா தளங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் உதகையில் அலைமோதுகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, பிஸ்கர்போஸ்ட் அருகே உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் இன்னசென்ட் திவ்யா தனிமைப்படுத்தி கொண்டார். கடந்த வாரம் அவரது மகனுக்கு கொரோனா பாதித்த நிலையில் தற்போது இன்னசென்ட் திவ்யா விற்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. ஏற்கனவே நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கொரோனா பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.