கூடலூரில் காட்டு யானை தாக்கியதில் மீண்டும் ஒருவர் உயிரிழப்பு..! பீதியில் பொதுமக்கள்..!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நாடு காணி பொன்னூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(50) இவர் நேற்று தேவாலா வனப்பகுதியில் விரகு சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது.
கூடலூர் அருகே விரகு சேகரிக்க சென்ற தொழிலாளி யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நாடு காணி பொன்னூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(50) இவர் நேற்று தேவாலா வனப்பகுதியில் விரகு சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வனச்சரக அலுவலகத்தில் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் வனப்பகுதியில் தேடிப்பார்த்துள்ளனர் அப்பொது வனப்பகுதியில் ராமமூர்த்தி சடலமாக கிடப்பதை பாத்துள்ளனர். ராமமூர்த்தியின் சடலம் கிடந்த இடத்தில் யானைகளின் கால் தடங்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராமமூர்த்தி காட்டு யானை தாக்கி இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் அப்பதியில் தேடிப் பார்க்கையில் நான்கு காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ராமமூர்த்தியின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்ததால் அப்பதியில் பரபரப்பு நிலவுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.