அது பொறந்த வீடு... இது புகுந்த வீடு... நீலகிரியில் மாஸ் காட்டும் ஆ.ராசா...!

நீலகிரி தொகுதியில் 3-வது முறையாக களமிறங்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, சென்டிமென்டாக பேசி கவர்ந்துவருகிறார்.

A. Raja Starts Campaign in Nilagires

ஆ.ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூர் தொகுதி மறு சீரமைப்பில் பொது தொகுதியாக கடந்த 2009-ல்  மாறியது. இதனால் நீலகிரி மக்களவைத் தொகுதியில் முதன் முறையாக 2009-ல் போட்டியிட்டார். முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் ஆ.ராசா ஆனார். ஆனால், 2ஜி விவகாரம் அவருடைய அமைச்சர் பதவியைப் பறித்தது. கடந்த முறையும் ஆ.ராசா நீலகிரியில் போட்டியிட்டார். ஆனால், சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.A. Raja Starts Campaign in Nilagires
 இந்த முறை 3-வது முறையாக ஆ.ராசா நீலகிரியில் களமிறங்கி உள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசா ஏராளமான கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டியிருந்தார். தற்போது திமுக வேட்பாளராக ஆ. ராசா களமிறக்கப்பட்ட பிறகு அத்தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார். உதகை சேரிங்கிராஸ் பகுதியில்  வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஆ. ராசா சென்டிமென்டாகப் பேசி கவர்ந்தார்.A. Raja Starts Campaign in Nilagires
 “பெரும்பலூர் எனது பிறந்த வீடு. ஆனால், நீலகிரி நான் புகுந்த வீடு. இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக திமுக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளேன். கடந்த முறை இங்கே நான் வெற்றி பெறவில்லை. அதற்காக இங்கே வராமல் நான் போகவில்லை. தோல்விடைந்தபோதும், நீலகிரி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டிருக்கிறேன்.” என்று டச்சிங்காகப் பேசினார்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆ. ராசா,  “தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வருகின்றன. ஆனால், நாளடைவில் இது மாறி விடும். ஸ்டாலின் கூறியது போல ராகுல்தான் பிரதமராவார்.” என்று தெரிவித்தார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios