நீலகிரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; உறவினர்கள் மறியல் போராட்டத்தால் 4 கி.மீ. அணிவகுத்து நிற்கும் வாகன
நீலகிரி மாவட்டம் உதகை அருகே 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியை உடனே கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டம்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தலைக்குந்தா பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாகக் கூறி சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உதகை, கூடலூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 300க்கும் மேற்ப்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வள்ளி, தெய்வானை தாயாருடன் திருத்தணியில் வீதி உலா வந்த முருக பெருமான்; பக்தர்கள் மனமுருகி வழிபாடு
இந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட நபர் தலைக்குந்தா பகுதியில் உள்ள காந்தி நகர் பகுதியை சேர்ந்த நபர் எனவும், உடனே அந்த நபரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் முறையாக விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்று வருவதால் உதகை கூடலூர், மைசூர் இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு சாலையின் இருபுறமும் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் போராட்டகாரர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.