பொதுத்தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுத உதவிய 5 ஆசிரியர்கள் இடைநீக்கம்

உதகை அருகே பிளஸ்-2 கணித தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக கல்வித்துறை அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம்,

5 teachers who helped students to read and write in 12th class public examination in nilgiris were fired

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி 3ம் தேதி வரையும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரையும் நடைபெற்றது. இதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத நீலகிரி மாவட்டத்தில்  41 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அவற்றில் 3 ஆயிரத்து 525 மாணவர்கள், 3 ஆயிரத்து 915 மாணவிகள் என மொத்தமாக 7 ஆயிரத்து 440 பேர் தேர்வு எழுதினர்.

மேல்நிலைத் தேர்வுக்காக 44 முதன்மை கண்காணிப்பாளர்கள், 43 துறை அலுவலர்கள், 86 அலுவலக பணியாளர்கள், 574 அறை கண்காணிப்பாளர்கள், 14 வினாத்தாள் வழித்தட அலுவலர்கள் என 761 ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க 69 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 27ம் தேதி நடந்த கணித தேர்வில் மாணவ, மாணவிகள் ஒரு சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவி செய்ததாக புகார் எழுந்தது.

திருவாரூர் மத்திய பல்கலை. மாணவிகள் மீது மதுபோதையில் இளைஞர்கள் தாக்குதல்

இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி சென்னை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் தேர்வில் விடை எழுத மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது.

கஞ்சா போதையில் பெண்களிடம் ஆபாச வார்த்தைகளில் வசை பாடிய இளைஞர்கள் விரட்டியடிப்பு

இதைத்தொடர்ந்து அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணிதத் தேர்வில் சில வினாக்கள் கடினமாகவும், ஆழமாக யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும் அன்றைய தினம் மாணவர்கள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios