Asianet News TamilAsianet News Tamil

கிரானைட் முறைகேடு; மு.க.அழகிரியின் மகன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி நேரில் ஆஜரானார்.

Duraidayanidhi appeared in court in the case of granite corruption in madurai vel
Author
First Published Oct 6, 2023, 10:47 AM IST

கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி, மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கிரானைட் குவாரிகள் மூடப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து  ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழு  பல்வேறு பகுதிகளில் விசாரணை நடத்திய பின்னர் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக 2013ம் ஆண்டு அரசிடம் அறிக்கை சமர்பித்தது.

இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த கிரானைட் குவாரி முறைகேடு சம்பந்தமான வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்நிலையில் கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்குகள் கனிம வளக் குற்றங்களை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

கோரிக்கை வைத்த 4 நாட்களில் வீடு தேடி வந்த பைக்; ஆட்சியரின் நடவடிக்கையால் மாற்று திறனாளிகள் நெகிழ்ச்சி

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் நிறுவனமான ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் மீதும் மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.257 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2013ம் ஆண்டில் ஒலம்பஸ் குவாரி நிறுவனத்தின் பங்குதாரர் துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர்மீது கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.

சென்னை ரயில் நிலையத்தில் மாணவனை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கல்லூரி மாணவர்கள்! அலறிய பயணிகள்.! நடந்தது என்ன?

குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது  காவல்துறையினர் 5191 பக்கங்கள் கொண்ட  குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 27ம் தேதி மேலூர் நீதிமன்றத்தில் துரை தயாநிதி உள்ளிட்டோர்  நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது  குற்றப்பத்திரிகைகளில் நகலை பெற்றுக் கொண்ட பின்பாக இந்த வழக்கு மதுரை மாவட்ட  கனிமவள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு செப்டம்பர் 5ம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கிரானைட் முறைகேடு வழக்கிற்காக நீதிபதி சிவகடாட்ஷம் முன்பாக துரைதயாநிதி நேரில் ஆஜரானார். இதன் காரணமாக மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios