Asianet News TamilAsianet News Tamil

கிருஷ்ணகிரியில் வாடகை பாக்கி வைத்த கடைகளை சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு பல லட்சம் ரூபாய் வரை வாடகை தொகை செலுத்தாததால் கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

rental pending government officials sealed shops in krishnagiri
Author
First Published Feb 14, 2023, 7:27 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை  பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கி தொகை லட்சக்கணக்கில் செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி மூலம் பல முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இருப்பினும் சில கடை உரிமையாளர்கள் வாடகை தொகை செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று ஊத்தங்கரை பேரூராட்சி செயல் அலுவலர்  சேம்கிங்ஸ்டன் தலைமையில் காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் துப்புரவு ஆய்வாளர் கிருபாகரன், இளநிலை உதவியாளர் சேகர், அலுவலக உதவியாளர் திருப்பதி மற்றும் அதிகாரிகள் வாடகை தொகை செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் இடையே கடும் மோதல்

இதனால் பேரூராட்சிக்கு 20 லட்சம் ரூபாய் வரை பணம் கட்டாயத்தால் இன்று அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்தனர். அதனை தொடர்ந்து வசூல் செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேரூராட்சி தலைவர் அமானுல்லா தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

சென்னையை தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சை முறை தொடக்கம்

Follow Us:
Download App:
  • android
  • ios