Asianet News TamilAsianet News Tamil

ஓசூரில் 6 நபர்களுக்கு மறுவாழ்வளித்த பெண்ணின் உடலை அரசு மரியாதையுடன் தகனம் செய்த அதிகாரிகள்

ஓசூரில் மூளைச்சாவடைந்து உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு அதிகாரிகள் மரியாதை செய்து உடலை தகனம் செய்தனர்.

Body of organ donor in Hosur cremated with state honors vel
Author
First Published Oct 30, 2023, 1:46 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, கணேஷ் நகரை சேர்ந்த கணேசன் என்பவது மனைவி ஹேமாவதி (வயது 39). இவர்களுக்கு யோகிதா(17) என்கிற 11ம் வகுப்பு படிக்கும் மகளும் பிரவீண்குமார்(12) என்கிற 7ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். இந்நிலையில் ஹேமாவதி கடந்த 25ம் தேதி தீராத தலைவலி காரணமாக ஓசூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மூளை புற்றுநோய் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

70 ஆண்டுகால காதல்; இறப்பிலும் இணை பிரியாத 90 வயது தம்பதி - திண்டுக்கல்லில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

இதனைத் தொடர்ந்து நேற்று பெங்களூரு காவேரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைந்தனர். அப்போது ஹேமாவதி மூளைசாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஹேமாவதியின் உடல் உறுப்புக்களை அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் தானமாக வழங்க முன்வந்தனர். அதன் அடிப்படையில் அவரது சிறுநீரகங்கள், கண்கள், தோல் ஆகிய உறுப்புக்கள் 6 பேருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக மாற்றம் செய்யப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்!” என தமிழக முதல்வர் ஸ்டாலின்  அறிவிப்பு செய்திருந்த நிலையில் ஹேமாவதியின் உடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள், ஒசூர் தாசில்தார் சுப்பிரமணி, ஆர்ஐ ரமேஷ் ஆகியோர்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் ஒசூர் வெங்கடேஷ் நகரில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios