70 ஆண்டுகால காதல்; இறப்பிலும் இணை பிரியாத 90 வயது தம்பதி - திண்டுக்கல்லில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

திண்டுக்கல் மாவட்டத்தில் மனைவி உயிரிழந்த துக்கம் தாங்காமல் 90 வயது முதியவர் தானும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

90 year old husband and wife death in dindigul district vel

திண்டுக்கல் மாவட்டம்,  என் பஞ்சம்பட்டி 2 வது வார்டு பெரியார் நகரைச் சேர்ந்தவர்  சூசை சுந்தரம் (வயது 90). இவரது மனைவி ஆரோக்கியம்மாள் (86). இவர்களுக்கு 3 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். 2 வது மகள் டேவிஸ் மேரி மட்டும் தனது குடும்பத்துடன் பஞ்சம்பட்டியிலேயே தங்கி தனது வயதான பொற்றோர் சூசை சுந்தரத்தையும் ஆரோக்கியம்மாளையும் கவனித்து வந்தார். சூசை சுந்தரம் திண்டுக்கல் தனியார் தோல் ஆலையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். 

சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதி கோர விபத்து; உயிரிழந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த உறவினர்கள்

வயது முதிர்வு காரணமாக நேற்று காலை ஆரோக்கியம்மாள் உயிரிழந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத சூசை சுந்தரம் மனம் உடைந்து காணப்பட்டார். மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த ஆரோக்கியம்மாளுக்கு செய்யவேண்டிய இறுதிச் சடங்கு பணிகளை செய்து கொண்டிருந்தனர். மாலை  கல்லறை தோட்டத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதற்க்கான ஊர்வலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர். 

முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி; இபிஎஸ்க்கு எதிரான கோசத்தால் பரபரப்பு

இந்நிலையில் சூசை சுந்தரம் மிகுந்த துக்கத்துடன் மனைவி உடல் வைக்கப்பட்ட இடத்தின் அருகே  மனைவியின் உடலை பார்த்தவாரே அமர்ந்திருந்த நிலையில் அவரும் உயிரிழந்தார். இதனை பார்த்த  பிள்ளைகளும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இறந்த கணவன், மனைவி இருவருக்கும் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டு கல்லறை தோட்டத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்.

திருமணம் முடிந்த தேதி  நாளிலிருந்து இணை பிரியாத கணவன், மனைவி சாவிலும் இணை பிரியாமல் இறந்தது பகுதியில் அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios