சசிகலாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று நடுரோட்டில் வீச்சரிவாளுடன் வாகனங்களை மறித்து இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென வீச்சரிவாள் மற்றும் கோடாரியுடன் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டார். அப்போது, சசிகலாவை உடனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி வீச்சரிவாளை ஆட்டி ஆட்டி தகாத வார்த்தைகளைப் பேசியபடி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை மிரட்டினார். இதனால் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து, சற்றுநேரத்தில் அந்த இளைஞரின் சகோதரர் அங்கு வந்து, அவரை அடித்து இழுத்துச் செல்கிறார். அந்த இளைஞர் பண்ணும் ரகளையைப் பார்த்த பொதுமக்கள் அங்கும், இங்கும் அச்சத்துடன் ஓடி ஒளிந்தனர். இளைஞர் இவ்வாறு ரகளை செய்தபோது அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.