கரூரில் காளியம்மன் கோவிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றிய ஆட்சியர்; போலீசார் குவிப்பு

கரூர் மாவட்டம் வீரணாம்பட்டியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் இரு சமூகத்தினரிடையேயான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து பிரபு சங்கர் சீலை அகற்றி அனைவரும் கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்தார்.

sealed kaliamman temple at veeranampatti village was opened by karur district collector

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட வீரணம்பட்டி  கிராமத்தில் காளியம்மன் கோவிலில் கடந்த 8ம் தேதி ஒரு சமூகம் கோவிலுக்குள்ளே வந்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் இரு தரப்பினருக்கும் பிரச்சினை நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியிவ் ஈடுபட்டு இரு சமூக முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால் குளித்தலை ஆர்டிஓ தலைமையில் வீரணம்பட்டி காளியம்மன் கோவில் பூண்டி சீல் வைக்கப்பட்டது. அப்போது ஊர் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பினர் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டப்பட்ட நிலையில் இன்று கோவில் திறப்பதற்கு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று வீரணம்பட்டி காளியம்மன் கோவில் திறக்க கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதம் வருகை தந்தனர்.

ஆட்சியரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைய சொன்ன மின்வாரிய அதிகாரி இடை நீக்கம்

பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வந்தனர்.மேலும் பாதுகாப்புக்காக வஜ்ரா வாகனமும் நிறுத்திவைக்கப்பட்டது. பூட்டி சீல் வைக்கப்பட்ட கோவில் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சீல் வைக்கப்பட்ட பூட்டை திறப்பதற்கு முறையான சாவி இல்லாததால் காவல்துறை உதவியுடன் பூட்டை கடப்பாரை மற்றும் சுத்தியால் தாக்கப்பட்டு உடைத்து திறந்தனர்.

இருப்பினும் அபிஷேகம் செய்வதற்கு ஒரு தரப்பினர் மட்டுமே உள்ளே வந்தனர். மற்றொரு தரப்பினர் வெளியே அமைதியாக காத்திருந்தனர். அவர்களுக்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் ஊர் முக்கியஸ்தரான கிராம ஊராட்சி மன்ற தலைவர் கோவிலுக்குள்ளே வருகை புரிந்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளுடன் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி தரிசனம் செய்தனர்.

சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலை திறக்க உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம்.!

தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்: ஊர்களுக்கு முன்மாதிரியாக சமூக நீதி நிலைநாட்டும் வகையில் ஒற்றுமையே பேணிக்காகவும் வகையில் வீரணம் பட்டி கிராம மக்கள் பாராட்டு வகைகள் உள்ளனர்,கோவில் பிரச்சனை சுமுக உடன்பாடு எட்டப்படுள்ளது. கிராமத்திற்கு வளர்ச்சி பணிக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios