2014ம் ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரது அக்கவுண்டிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், வெற்றி பெற்ற பின் பாஜக நிர்வாகிகள் நாங்கள் அப்படி சொல்லவே இல்லை என சிலரும்.. தேர்தலுக்காக அப்படி சொன்னோம் ஒவ்வொரு அக்கவுண்டிலும் எப்படி 15 லட்சம் செலுத்த முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

 

இப்போது மீண்டும் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இப்போது வரை மத்திய அரசு தங்களது அக்கவுண்டில் 15 லட்சம் போட்டு விடும் என நம்பி வருகிறார்கள் மக்கள். இந்நிலையில் தான் தபால் கணக்கு தொடங்கினால் மத்திய அரசு 15 லட்சம் தரும் என பரவிய வதந்தியை நம்பி மக்கள் தபால் நிலையத்தில் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா எல்லையில் உள்ள மூணாறில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில், தபால் கணக்கு உள்ளவர்களுக்கு மத்திய அரசு 15 லட்சம் தரவுள்ளதாக வதந்தி பரவி உள்ளது. இதனை நம்பி தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்க மக்கள் ஆரம்பித்துள்ளனர். இந்த தகவல் வேகமாக பரவி மக்கள் கூட்டம் அதிகமாக தொடங்கியுள்ளது. இப்படி ஒரு அறிவிப்பு ஏதும் வரவில்லை என பலர் கூறியும் மக்கள் தபால் நிலையத்தில் இருந்து கலைந்து செல்லாமல் இருந்துள்ளனர். ஒருவேளை வதந்தி உண்மையாகி விட்டால் 15 லட்சம் கிடைக்காமல் போய்விடும் என தபால் கணக்கை தொடங்க மக்கள் வரிசையில் காத்திருந்து உள்ளனர்.

இதையும் படிங்க:- மு.க.ஸ்டாலினை மீறி எதுவும் செய்ய முடியாது... வேலூருக்கு வராதேம்மா... கனிமொழியிடம் துரைமுருகன் கெஞ்சல்..!

தபால் கணக்கைத் தொடங்க ஆதார் மட்டும் போதும் என்பதால் பலரும் புதிதாக கணக்கை தொடங்க ஆரம்பித்து உள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 1050 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தபால் நிலைய அதிகாரிகளே ‘வதந்திகளை நம்பாதீர்கள்’ என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: - தற்கொலைக்கு ஒரு மணி நேரத்துற்கு முன் 50000 பேருக்கு சம்பளம் போட்ட சித்தார்த்தா... சாவிலும் மாறாத நேர்மை..!