Asianet News TamilAsianet News Tamil

இனி ஹெல்மெட் அணிந்தால் தான் சரக்கு.. குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மாவட்ட ஆட்சியர்..!

 வரும் 18-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மார்க் கடைகள் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் எவருக்கும் எந்த ஒரு சேவையும் வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

mandatory to wear a helmet from the 18th ... Karur District Collector
Author
Karur, First Published Apr 7, 2022, 12:23 PM IST

கரூரில் வரும் 18-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஹெல்மெட் அணிவது கட்டாயம்

இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வெளியிடப்பட்ட அறிக்கையில்;- வரும் 18-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மார்க் கடைகள் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் எவருக்கும் எந்த ஒரு சேவையும் வழங்கப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க;- கொஞ்ச நேரம் என்னோட அட்ஜஸ்ட் பண்ணு.. உன்னோட வேலைய பர்மனென்ட் ஆக்குறேன்.. பெண் ஊழியரிடம் அத்துமீறிய டாக்டர்

mandatory to wear a helmet from the 18th ... Karur District Collector

மதுபானம் வழங்கக் கூடாது

மேலும் இதுகுறித்து அனைத்து பகுதிகள், நிறுவனங்களின் முகப்புகளில் அறிவிப்பு பலகை வைக்கப்படும் இச்செய்தி குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல் பங்குகளில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது.,அரசு மதுபான கடைகளில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக் கூடாது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இரு சக்கரங்களில் வருபவர்கள் தலைக்கவசம் அணியாவிட்டால் பணியாற்ற அனுமதிக்க கூடாது.

இதையும் படிங்க;- தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி வாலிபர்களுடன் அடிக்கடி உல்லாசம்.. இறுதியில் கள்ளக்காதலனே ஏமனாகா மாறிய பயங்கரம்.!

mandatory to wear a helmet from the 18th ... Karur District Collector

ஆட்சியர் எச்சரிக்கை

ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய தலைக் கவசங்களை அணிய வேண்டும். மேலும் கரூர் மாவட்டத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தற்போது வரை தலைக்கவசம் அணியாத வாகன போட்டிகளாக 75,534 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வருகின்றார்கள் என்ற நிலையினை கரூர் மாவட்டத்தில் நாம் அனைவரும் உருவாக்கவேண்டும் என்ற நோக்கில் வரும் 18ம் தேதிக்கு பிறகு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் இத்திட்டம் மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அனைவரும் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios